தரமான மருத்துவ வசதியை வழங்குவதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது.

கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ வசதியை வழங்குவதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது.

புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு.

தமிழகத்திலிருந்து புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு நடப்பு ஆண்டில்  ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆதரவற்ற கிறிஸ்துவ பெண்களுக்கான நலச்சங்கம் இயங்கிவருகிறது. இந்தச் சங்கங்கள் வெளியே பெரும் நிதி உதவியில் இரண்டு மடங்காக மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இதில் ஆதரவற்ற பெண்களுக்கு ஆதார நிதியாக தலா ஒரு லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. Read more…

அம்மா மினி கிளினிக் துவக்க விழா!

அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவம் எளிதாக சென்றடையும் நோக்கத்தோடு மாண்புமிகு முதல்வர் & மாண்புமிகு துணை முதல்வர் அவர்களால் இன்று சென்னையில் துவங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க திட்டமான அம்மா மினி கிளினிக் துவக்க விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் கலந்து கொண்டேன்.

உயர்மட்ட சாலை மற்றும் மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினேன்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆணைப்படி, கோவை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.10. கீ.மி நீளத்தில் உயர்மட்ட சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினேன்.

விவசாயிகளின் காவல் அரணாக தமிழக அரசு செயல்படுகிறது!

‘2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, வேளாண் துறைக்கு ரூ.11 ஆயிரத்து 894 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே வேளாண் துறைக்கு, அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் மாநிலம் தமிழகம்தான். அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் தமிழகத்தில் 2-ம் பசுமைப் புரட்சி ஏற்பட்டு வருகின்றது. தமிழக முதல்வர் நொய்யல் ஆற்றை சீரமைக்க ரூ.230 கோடி Read more…

தொழிற்சங்க கட்டிடம் திறந்து வைத்தேன்.

 கோவை மேட்டுப்பாளையம் சாலையில் புதிதாக ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தேன்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, விழுந்த மரங்கள் இரவோடு இரவாக வெட்டி அகற்றப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 169 ல் உள்ள கண்ணன் காலணியில் ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 25 எச்பி பம்பு செட்டுகள் மூலம் மழை நீர் வெளியேற்றப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு!

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தையும் ஊரகப்பகுதிகளில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டிய தருணம்.